Skip to main content

"மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு இந்த படம் மாற்று மருந்தாக இருக்கும்" - கருணாகரன் 

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
bvdbzdbszd

 

வைபவ் - ராதா மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மலேசியா டு அம்னீசியா'. வாணி போஜன் நாயகியாகவும், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், மே 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் கருணாகரன் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில்...

 

"இயக்குனர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். 'உப்பு கருவாடு' படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. 'மலேசியா டு அம்னீசியா' படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரம்பி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர், மயில் சாமி, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது" என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்