ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டானார் கார்த்தி. இதில் நலன் குமாரசாமி படம் கார்த்தியின் 26வது படமாகவும் பிரேம் குமார் படம் 27வது படமாகவும் உருவானது. ஆனால் இதில் பிரேம் குமார் படமான மெய்யழகன் கடந்த மாதம் வெளியானது. இருப்பினும் கார்த்தியின் 26வது படம் தயாரிப்பில் இருக்கிறது. இப்படத்தை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட சர்தார் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து டாணாக்காரன் தமிழ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் நலன் குமாரசாமி படம் ‘வா வாத்தியார்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதன் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெற்றிருந்தார்.
இதையடுத்து இப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.