மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ், இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். கிராமத்து மக்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கண்ணபிரான் கதாபாத்திரத்தில் நட்டி வெளிப்படுத்திய நடிப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நட்டி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை திட்டாதீங்க எப்போவ்... ஆத்தோவ்... அண்ணோவ்... கண்ணபிரானா நடிச்சுதான்யா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா... முடியலைப்பா... அது வெறும் நடிப்புப்பா... ரசிகர்களுக்கு எனது நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
என்ன திட்டதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன்..phone messagela..திட்டாதீங்கப்பா..முடியிலப்பா..அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி...🙏🙏🙏
— N.Nataraja Subramani (@natty_nataraj) April 11, 2021