பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத் அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். பாலிவுட்டில் திரையுலகினரின் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறி வரும் கங்கனா, மோடி பிரதமராக பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராக காட்டிக்கொண்டு, தொடர்ந்து மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது பல சர்ச்சைகளும், விவாதத்திற்கும் வழிவகுக்கும்.
அந்த வகையில் நடிகை கங்கனா கூறிய கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கடமை பாதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா, "நான் காந்தியவாதி அல்ல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வழியை பின்பற்றும் நேத்தவாதி. நான் இப்படி பேசுவது பேசுவது பல பிரச்சனைகளை கொடுக்கலாம். எனது பார்வையில் நேதாஜியின் போராட்டம் மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல புரட்சியாளர்களின் போராட்டமும் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் வீரசாவர்கர் என்று தெரிவித்துள்ளார். பொதுவாக ஒரு தரப்பினர் சாவர்க்கரை புரட்சியாளராக கொண்டாடி வருகின்றனர். மற்றொரு தரப்பினர் இதனை கடுமையாக எதிர்த்து, மன்னிப்பு கடிதம் எழுதுவது புரட்சியா என விமர்சித்து வருகின்றனர்.
அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட காலத்தில் அவர் புல்புல் பறவை எனும் சிறிய பறவையில் ஏறி இந்தியாவிற்கு வந்து சொல்வர் என கர்நாடக மாநிலத்தின் ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில், நேதாஜியுடன் சவர்க்கரை கங்கனா ஒப்பீட்டு பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.