தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் உள்ள காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பக்கம் வாயிலாக காமராஜர் பிறந்தநாள் குறித்துப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை… pic.twitter.com/z8PJEWyfuQ— Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2023