Skip to main content

பிரதாப் போத்தனின் உடலுக்கு கமல் நேரில் அஞ்சலி

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

kamalhaasan condolences pratap pothen

 

இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன்(69) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த 1979 ஆம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் பலரது கவனத்தை பெற்ற இவர் மூடுபனி, வறுமையின் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களையும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றி விழா உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியும் உள்ளார். 

 

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர்கள் கமல்ஹாசன், மனோபாலா, கருணாஸ், நரேன் , இயக்குநர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரதாப் போத்தனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்