Skip to main content

"உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்!" - காஜல் அகர்வால் 

Published on 30/04/2021 | Edited on 30/04/2021
vagsd

 

பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால்  இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"மிகவும் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரிடம் நான் பணிபுரியவும், அவரை பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன். ஓம் சாந்தி கே.வி சார். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விரைவாக சென்றுவிட்டிர்கள்" என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்