Skip to main content

திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்!!!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020
kajal agarwal

 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும், தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.

 

தற்போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல். 

 

சமீபத்தில் காஜல் அவகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், மாப்பிள்ளை பெரிய தொழிலதிபர் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே காஜல் அகர்வால் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது. அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

இந்நிலையில் தனது திருமணம் குறித்த செய்தியை உறுதி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால். தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை வருகிற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்