Skip to main content

காப்பான் படத்தில் கலாய்க்கப்பட்ட விஜய் சேதுபதி...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

கே.வி.ஆனந்த இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் காப்பான். சூர்யா- கே.வி. ஆனந்த கூட்டணியில் இது மூன்றாவது படம் ஆகும். உலகமெங்கும் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 

vijay sethupathy

 

 

பொதுவாக கே.வி. ஆனந்த இயக்கும் படங்களில் அவர் இதற்கு முன்பு இயக்கிய படத்தை தானே கலாய்க்கும் வழக்கம் உண்டு. இதை அவர் ட்ரேட் மார்க்காகவே செய்து வருகிறார். மேலும், அவர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இறந்தபின்பு ஹீரோவும் ஹீரோயினும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி அமைப்பார். அதுவும் அவருடைய ஒரு ட்ரேட் மார்க்.

அதுபோல ஒரு ட்ரேட் மார்க்கை காப்பான் படத்திலும் அமைத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில், சமுத்திரக்கனி மனைவி கதாபாத்திரம், விஜய் சேதுபதி அட்டைப்படம் கொண்ட வார இதழை காலேஜ் நோட்டை பிடிப்பது போன்ற ஒரு பொஷிஸனில் பிடித்திருப்பார். உடனே சமுத்திரக்கனி விஜய் சேதுபதி புகைப்படத்தை பார்த்து. “இவன் வேற... பொம்பளைங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான்” என்று கிண்டலாக சொல்லி அந்த புத்தகத்தை வாங்கி கீழே வைப்பார்.

காப்பான் படத்திற்கு முன்பாக கே.வி.ஆனந்த் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வெற்றிபெற்ற படம் கவண் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்