
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு நடுவே வரும் ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் காலா படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். கோடை விடுமுறை ரீலீஸையொட்டி இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நேற்றே வெளியிடுவதாக தனுஷ் கூறியிருந்த வேளையில் ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலா டீசர் ரிலீஸ் மார்ச் 2ஆம் தேதி (இன்று) தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அதிகாலை 12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் 'இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!' என்னும் வசனத்தோடு தனுஷ் வெளியிட்டார். இதன் பின் டீசர் வெளியாகி சில மணி நேரத்திலேயே ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்து பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறது.