
பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையே டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இருந்தும் தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை ஜூன் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.