
நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு நடிகை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படமான 'துமாரி சுலு' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இதின் ஹிந்தி பதிப்பில் வித்யாபாலன் நடித்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். மொழி படத்திற்கு பின் ஜோதிகாவுடன் இரண்டாவது முறையாக இணையும், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை பற்றி ஜோதிகா பேசியபோது...."நான் வித்யா பாலன் தீவிர ரசிகை. அவர் நடித்த படங்கள் எதையும் பார்க்காமல் விட்டதில்லை. வித்யாபாலன் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் 'துமாரி சுலு'. வித்யாபாலன் நடித்த வேடத்தில் நான் தமிழில் நடிப்பது என்னை கவுரவப்படுத்துவதாகவே கருதுகிறேன" என்றார்.