மிகவும் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனைகளுள் ஒன்று தஞ்சாவூர் ராஜ மிராசுதார் மருத்துவமனை. அண்மையில் நடிகை ஜோதிகா ஒரு விருது வழங்கும் மேடையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு எதிர்புறத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிக்க சென்றேன். அப்போது, அந்த மருத்துவமனையின் தோற்றம், சுத்தம், சுகாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். கோவிலுக்கு எவ்வளவோ நன்கொடை செய்கிறோம் அதுபோல கல்விக்கும், மருத்துவமனைக்கும் நன்கொடை செய்யக்கூடாதா என்று கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார். ஜோதிகாவின் இந்த செயலை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டியுள்ளார்.
மேலும், அந்த மருத்துவமனையில் இருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா மிகவும் மோசமாக பழுது அடைந்திருந்தது. தற்போது அந்த பூங்காவை சீர் செய்து வண்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து தந்துள்ளனர்.