ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சீறு. இந்த படத்திற்கு இசயமைப்பாளர் டி.இமான் இசயமைக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.
இந்த படம் வருகிற 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கும் நிலையில் படம் குறித்து பிரத்யேகமாக நமக்கு பேட்டியளித்தார் ஹீரோ ஜீவா. அப்போது அவரிடம், “ உங்களுடைய அப்பா ஆர்.பி. சௌதிரி சார் எவ்வளவுன் பக்கபலமாக உங்களுக்கு இருந்திருக்கிறார்” என்று கேள்விகேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜீவா, “ சீறு படமாக இருந்தாலும் சரி, எந்த படமாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் முதலில் ஜட்ஜ்மெண்டாக சொல்வது என்னுடைய அப்பாதான். என்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒன்றாக சேர்ந்து பார்த்தாலே அது ஓடும் ஒடாது என்பதை சொல்லிவிடுவார்கள். அவரும் எங்க அம்மாவும் படம் குறித்து சொன்னால் போதுமானது. சீறு படத்தை கூட அம்மா, அப்பா இருவரும் புத்தாண்டு முதல் நாளே பார்த்தனர். நான் கூட முதல் நாளே திட்டு வாங்குவேனா என்று எதிர்பார்த்தேன். ஆனால், நல்ல படியாக பாராட்டினார்கள். எனக்கு அப்பா அம்மாதான் முதல் விமர்சகர்கள், அதன்பின் தான் இந்த இண்டெர்நெட் விமர்சகர்கள். உங்களை பிடித்த மனிதர்களிடம் இருந்துதான் சரியான ரிசல்ட் வரும். அப்போ எனக்கு தொடக்கத்திலிருந்தே மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். ராம், கற்றது தமிழ் போன்ற படங்களில் நடிக்க போகிறேன் என்றபோது ரிஸ்க் எடுக்கிற இருந்தாலும் பண்ணு என்று தைரியம் கொடுத்தார்” என்றார்.