உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைட்டானிக் கப்பல் விபத்து, இப்போது 111 ஆண்டுகளை கடந்துள்ளது. இன்று வரை அக்கப்பலை நீர்மூழ்கிக் கப்பலில் சென்று மக்கள் பார்த்து வருகின்றனர். அப்படி கடந்த 18ஆம் தேதி கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு சென்றுள்ளனர். அந்த நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனதை அடுத்து அதில் பயணித்த 5 பேரும் உயிர் இழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரக் காவல்படை அறிவித்திருந்தது.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பைக் கிளப்பிய நிலையில் டைட்டானிக் படத்தை இயக்கியவரும், டைட்டானிக் படத்திற்க்காக 33 முறை கடலுக்கு அடியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்த்தவருமான இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "நீர்மூழ்கி கப்பல் மூலம் செல்வது மோசமான யோசனை தான் என்று நான் முன்பே நினைத்தேன்.ஆனால் அதை கண்டுபிடித்தவர் என்னை விட புத்திசாலி என்றும் கருதினேன். இருப்பினும் நான் அந்த தொழில்நுட்பத்தை ஒருபோதும் பரிசோதிக்கவில்லை. காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் வடிவமைப்புக் குறைபாடுகள் இருந்தது. மேலும் அந்த கப்பலின் முகம் பகுதி மோசமாக இருந்தது. அதோடு கப்பல் காணாமல் போன அதே நேரத்தில் பலத்த சத்தம் கேட்டது என்பதை ஒரு மணி நேரத்திற்குள் உறுதிப்படுத்தினோம்" என தெரிவித்தார்.