'தண்டகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார்தங்கம் பேசும்போது....
![jaguar thangam](http://image.nakkheeran.in/cdn/farfuture/bdr1qO2nTagva1jFDEsxG-N36ItbTzuxnMqzC9i26s8/1566972495/sites/default/files/inline-images/Untitled_16.jpg)
"இங்கே எல்லா படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதில்லை. யாரோ 4 பேர் கையில் திரையரங்குகள் உள்ளன. இதை மாற்ற வேண்டும். தமிழக அரசு சிறிய சிறிய திரையரங்குகளை உருவாக்கி எல்லா படங்களையும் வெளியிட ஆவன செய்ய வேண்டும். இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். அப்போதெல்லாம் திரையுலகினர் ஒரு குடும்பம் போல் இருந்தார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இன்று அப்படிபட்ட நட்புறவு இல்லை. இது மாற வேண்டும். எம்ஜிஆர், சிவாஜி விரோதிகள் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் ஒருவர் வீட்டுக்குச் ஒருவர் சென்று சாப்பிடுவார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் போல் இருப்பார்கள். இதில் நாயகனாக நடித்த அபிஷேக்கைப் பாராட்ட சக நடிகராக இருக்கும் அஸ்வின் வந்திருப்பது பாராட்டத்தக்கது" என்றார்.
![sixer](http://image.nakkheeran.in/cdn/farfuture/L7WxwpK52-KRhoG-O-GxDEyzpY6f7fbQNOmAj-WZB4U/1567059611/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_2.jpg)