
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிபில் அஜித், சிறுத்தை சிவா நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். ரோபோ ஷங்கர், யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் டி.இம்மான் இந்த படத்தின் மூலமாக முதல் முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் பட அதிபர்கள் ஸ்ட்ரைக் காரணாமாக படப்பிடிப்பை படக்குழு தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளாரான டி.இமானை அஜித் ரசிகர்கள் தொடர்பு கொண்டு பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதில் அஜித்தின் இன்ட்ரோ பாடல் முதல் படத்தின் தீம் மியூசிக் வரை பட்டய கெளப்பனும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு டி இமானும் தான் மிகுந்த உற்சாகமாக இருப்பதாகவும், மேலும் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு பிடித்த வகையில் பாடல்கள் இருக்கும் என உறுதி அளித்துள்ளார். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.