சென்னையில் நேற்று (08/11/2022) நடைபெற்ற 'என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ், "எதப் பாத்தாலும் ரெய் ஜெயிண்ட். அத விட்டா யாரும் கிடையாது. எல்லா படமும் ரெட் ஜெயிண்ட் தான் வளைச்சிப் போட்ருக்காங்க. உதயநிதி அவங்களால தான், அப்படிங்கற மாதிரி சொல்லி, நான் காதுபட கேட்டுட்டு தான் இருப்பேன். ஆனால், உண்மை என்னன்னா, ரெட் ஜெயிண்ட் அப்படிங்கற பேர, நிறைய பேர் மிஸ்யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தெரிஞ்சி அதான் உண்மை.
அந்த ரெட் ஜெயிண்ட்-னால எவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கு. எத்தனை படங்கள் ரிலீஸ் ஆவதற்கான வாய்ப்பு இருக்கு, அப்படிங்கறது இருக்குல. அதுவும் உண்மைதான். என்கிட்டயே நிறைய பேர் வந்து ரெட் ஜெயிண்ட்டயோ உதயநிதி சாரையோ படம் பாக்கறதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா? அவங்க பாத்து வாங்கிட்டாங்கன்னா, அந்த பேனர் இருந்தாலே படத்துக்கு ஏதோவொரு விதத்துல க்ரௌடு வரும். படம் நல்லபடியா வந்துரும். அப்படின்ட்டு ஒரு நம்பிக்கையோட எல்லாரும் அவங்கட்ட கியூவுல நின்னிட்டுருக்காங்க.
அதே மாதிரி, இன்னைக்கு நிறைய படங்கள் சக்ஸஸ் ஆனதுக்கு காரணம் என்னன்னா, அவங்ககிட்ட போகும் போது எந்த தப்பு தண்டாவும் இல்லாம கரெக்ட்டா காசு புரொடியூசர்ஸ்ட்ட வருது. அவங்க ரிலீஸ் பண்றது சாதாரண படங்களா இருந்தா கூட படத்துல ஸ்டஃப் இருந்ததுனா அந்த படம் மிகப்பெரிய கலெக்சனை கொடுக்குது. இதெல்லாம் நான் பாத்துட்டே இருக்கேன். லவ் டுடே, அவங்க தான் ரிலீஸ் பண்ணிருக்காங்க. அவ்வளவு பெரிய புரொடியூசர். ஆனா, வந்து ரெட் ஜெயிண்ட்ல கொடுத்து ரிலீஸ் ஆகி மூன்று, நான்கு மடங்கு போயிட்டு இருக்கு.
காந்தாரானு சொல்லிட்டு ஒரு படம் பாத்தேன். அதுவும் அவ்வளவு பெரிய கலெக்சன் சம்பாதிச்சது. மிகப்பெரிய சக்ஸஸ்புல்லான ஒரு படம். லவ் டுடே பாத்தேன். இப்ப வர யங்ஸ்டர்ஸ் எல்லாமே ரீசனபுலா படம் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ் இண்டஸ்ட்ரீக்கு வந்து கரெக்ட்டான சூழல் இருக்கு. அதனால இந்த மாதிரி நேரத்துல இவருடைய படம் வரது, அப்படிங்கறது ரொம்ப சந்தோஷப் பட வேண்டிய சமாச்சாரம். ரொம்ப சிரமப்பட்டு, ரொம்ப செலவு பண்ணி, இந்த படத்தைப் பண்ணிருக்காரு. மியூசிக் டைரக்டர் அழகா சொன்னாரு. புரொடியூசர் நல்லா இருந்தால் தான் மற்றவர்கள் எல்லாமே நல்லாருக்க முடியும். அதனால அந்த காலத்துல, எம்.ஜி.ஆர். ஆகட்டும், சிவாஜி சார் ஆகட்டும், இந்த புரொடியூசர்கள மட்டும் முதலாளி, முதலாளின்னு கூப்பிட்டு இருந்தாங்க. இன்னைக்கு அந்த மாதிரிலாம் இருக்குதானு பாக்குறது ரொம்ப கஷ்டம்." எனத் தெரிவித்தார்.