Skip to main content

தலைமை சரியாய் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்! - அருண் விஜய்  

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
arun vijay


 

 

மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் வரும் பாடல்களை மேடையில் இசையமைத்து ரசிகர்களை சிறகடிக்கச் செய்தார். மாலை 7:30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவை பாடகர்கள் சின்மயி மற்றும் கார்த்திக் தொகுத்து வழங்கினார்கள்.
 

அரவிந்த்சாமி - அதிதிராவ் இவர்களை தொடர்ந்து அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் மேடை ஏறி பேசினார்கள். அப்போது முதலில் பேசிய அருண் விஜய்,
 

”மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் இவர்கள் கூட்டணியில் நான் நடித்திருப்பது என்பதை கனவு நிஜமாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். செக்கச் சிவந்த வானம் படத்தில் நான் இருந்தது என் வாழ்க்கையின் சிறந்த அனுபவமாகத்தான் பார்க்கிறேன். மணி சாரிடம் இருந்து படப்பிடிப்பில் தினசரி ஏதாவது ஒரு நுணுக்கத்தை கற்றுக்கொண்டிருந்திருக்கிறேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மிகவும்  டென்ஷனாக இருந்தேன். செட்டில் மணி சார், சந்தோஷ் சார், பல நட்சத்திரங்களுடன் படப்பிடிப்பு எப்படி இருக்க போகிறது என்று டென்ஸனாக இருந்தேன். ஆனால், மணி சாரை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தவுடனேயே அவர் என்னை எளிதாக உணரவைத்துவிட்டார். இருந்தாலும் ஒருவிதமான டென்ஷன் இருந்தது. அதை அரவிந்த் சாமி அண்ணன்தான் சரி செய்தார். தைரியமா மணிசாரிடம் போய் பேச சொன்னார். மணிரத்னம் சார் மட்டுமல்ல செட்டில் உள்ள எல்லோரும் அணுகுவதற்கு ரொம்ப எளிதாக இருந்தார்கள். அதுதான், தலைமை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்று சொல்வார்களே அப்படித்தான்.
 

 

 

இப்படத்தில் தியாகு என்ற கதாபாத்திரத்திற்காக எனக்கு வாய்ப்பளித்தற்கும், இப்படத்தில் என்னையும் ஒருவனாக சேர்த்ததற்கும் நன்றி. மணி சார் படப்பிடிப்பில் மைக் வச்சு டைரக்ஷன்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, ஒரமாக அமர்ந்துவிடுவார் என்று நினைத்தேன். கடைசியில், படப்பிடிப்பில் அவர் ஒரு புதுமுக இயக்குனர் போல செயல்பட்டார், இரவு எல்லோரிடமும் சென்று உங்களுக்கு நாளை இதுதான் வேலை என்று என் நினைப்பை உடைத்தார். இன்னுமொரு விஷயம் இந்த படத்தில் சகநடிகாரக என்னுடைய தம்பி சிம்பு நடித்திருக்கிறார். அவரை பற்றி எனக்கு முன்னமே தெரியும் இருந்தாலும் இந்த படத்தில் அவருடன் நெறுங்கி பழகியபோதுதான் அவர் மிகவும் நல்ல மனிதர் என்பதை தெரிந்துகொண்டேன். எனக்காக இந்த படத்தில் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேனோ, அதேபோல சிம்புவுக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்து, விஜய் சேதுபதி சார், அவருடைய சிறந்த பகுதி என்றால் எதார்த்தம்தான். அது நடிப்பாக இருந்தாலும் சரி, நிஜமாக இருந்தாலும் சரி. விஜய் சேதுபதி பிரதர், அதை அப்படியே தொடருங்க.
 

கடைசியாக, ரஹ்மான் சார், நான் சினிமாவுக்கு வந்ததற்கு முதல் காரணம் ரஹ்மான் சார். நான் நடிக்க இருந்த முதல் படத்திற்கு ரஹ்மான் சார்தான் இசை அமைக்க இருப்பதாக இருந்தது. அப்போது நான் 12ஆம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தேன். ரஹ்மான் சார் இசை என்பதால் ஒத்துக்கொண்டேன். ஆனால், அந்த படம் நிறைவேறாமலே போனது. ஒருவேளை, அந்த படம் எடுக்கப்பட்டு அதில் ரஹ்மான் சார் இசையில் நான் நடித்திருந்தால் என் வாழ்க்கையில் இத்தனை போராட்டங்கள் நான் சந்தித்திருக்க மாட்டேன் என்று நினைத்திருக்கிறேன். எது நடந்தாலும் ஒரு காணத்திற்காகத்தான் நடக்கும், இந்த படம் என்னுடைய 25வது படம் அதில் ஏ.ஆர். ரஹ்மான் இசை. மிகவும் நன்றி ரஹ்மான் சார், உங்களுடைய இசையில் என்னுடைய 25வது படத்தை திரையில் பார்க்க உற்சாகமாக இருக்கிறேன்.
 

மணிரத்னம் சார் மற்றும் சந்தோஷ் சிவன் இவர்கள் இருவரும் சேர்ந்தாலே படத்தில் பார்க்கும் ஒவ்வொரு ப்ரேம்களும் மாயாஜாலம் நிறைந்ததாக இருக்கும், படப்பில் கூட நாங்களெல்லாம் அதைபற்றி பேசிகொண்டிருப்போம். நன்றி” என்றார்.

 

சார்ந்த செய்திகள்