Skip to main content

நான் பட வாய்ப்புக்காக போஸ் கொடுக்கவில்லை -  ரகுல் பிரீத்தி சிங்

Published on 19/02/2018 | Edited on 20/02/2018
rakulpreet


தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் ரகுல் பிரீத்தி சிங் ஹிந்தியில் நடித்த 'அய்யாரி' படம் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ என்ற ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியான நிலையில் இதை பற்றி தென்இந்திய பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்து ரகுல் பிரீத்தி சிங் பேசுகையில்...."மேக்ஸிம் ஆங்கில புத்தக அட்டை படத்தில் இடம் பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாக கிடைத்து விடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாக தென்இந்தியாவில் தான் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தி படஉலகில் இது பெரிய விஷயமே இல்லை. 'அய்யாரி' என்ற இந்தி படத்தில் நான் நடித்திருப்பதால் தான் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இந்தி சினிமாவில் நடித்து வரும் தீபிகா படுகோனே, ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உள்பட பல நடிகைகள் இந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்து இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன. பட வாய்ப்புக்காக இது போன்று போஸ் கொடுக்கவில்லை" என பேசினார்.


 

சார்ந்த செய்திகள்