ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சீறு. இந்த படத்திற்கு இசயமைப்பாளர் டி.இமான் இசயமைக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கும் நிலையில் படம் குறித்து பிரத்யேகமாக நமக்கு பேட்டியளித்தார் ஹீரோ ஜீவா.
அப்போது அவரிடம்,‘சிவா மனசுல சக்தி’ போன்ற ஜாலியான படங்களும் பண்ணுங்க, அதேபோல கற்றது தமிழ், ரௌத்திரம் பழகு, ராம் போன்ற படங்களிலும் கவனும் செலுத்துங்கள் ஜீவா என்று உங்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜீவா, “அந்த ஜானரில்தான் ஜிப்ஸி என்கிற படம் பண்ணியிருக்கிறேன். ராம், கற்றது தமிழ் படங்கள் ரிலீஸ் சமயத்திலும் பல பிரச்சனைகள் வந்தன. கற்றது தமிழ் மாதிரி படம் இனி நான் எப்போதும் பண்ண மாட்டேன். அந்த படம் அப்போது பார்க்கும்போதும் மன அழுத்தத்தை தரும், இப்போது பார்க்கும்போதும் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்தை தரும். அனைவரும் ஏதோ விஷயத்தால் நெகட்டிவ்வாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதை நாம் அப்பட்டமாக வெளியே காட்ட வேண்டும் என அவசியமில்லை. நெகட்டிவ் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி லைஃபில் பாஸிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்றுதான் படங்கள் பண்ணுகிறேன். கற்றது தமிழ் படம் பலருக்கு நெகட்டிவ்வாக பட்டது, அதேபோல பாஸிட்டிவ்வாகவும் பட்டது. அது ஒரு கேள்விக்குள் இருக்கும் படம். சிவா மனசுல சக்தி பார்த்தீர்கள் என்றால் அந்த காலக் கட்டத்திற்கு ஏற்றார்போல் என்னுடைய வயதிற்கு ஏற்றார்போல அந்த படத்தை பண்ணினேன். அதன்பின் நிறைய படங்கள் பண்ணேன், ஒரு இடத்தில் இரண்டு மூன்று வருடங்கள் இடைவெளி வந்துவிட்டது. அதன்பின் திருநாள் போன்ற படங்கள் ஒருசில ஆடியன்ஸை கவர்ந்தது. நீங்கள் சொல்லும் ஆடியன்ஸ் எல்லாம் இண்டர்நெட் மற்றும் நகரத்தில் வசிக்கும் ஆடியன்ஸ் சொல்கிறீர்கள். நான் சொல்வது வீட்டில் இருக்கும் குட்டி குழந்தைகள், ஃபேமிலி அப்படி சொல்கிறேன். நான் முன்பை போல வித்தியாச வித்தியாசமான படங்கள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறே. ஆனால், அது யாரும் வெளிச்சம்போட்டு காட்ட மாட்டிங்கிறாங்கள்” என்றார்.