Skip to main content

ஒரு வார்த்தை மட்டும்தான் பேசுவேன்... பிடிவாதம் பிடித்த சிம்பு  

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
simbu

 

 

 

மணிரத்னத்தின் மல்டி ஸ்டாரர் படமான 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் வரும் பாடல்களை மேடையில் இசையமைத்து ரசிகர்களை சிறகடிக்கச் செய்தார். மாலை 7:30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவை பாடகர்கள் சின்மயி மற்றும் கார்த்திக் தொகுத்து வழங்கினார்கள். 
 

 

அரவிந்த்சாமி - அதிதிராவ், அருண் விஜய் - ஐஸ்வர்யா ராஜேஷ் மேடை ஏறி பேசினார்கள். இவர்களை தொடர்ந்து மேடை ஏறினார்கள் சிம்பு - டயானா எரப்பா ஜோடி. அப்போது, சிம்புவின் ரசிகர்கள் ஆரவாரமாக ’எஸ்.டி.ஆர்...எஸ்.டி.ஆர்...’ என்று பெருங்கூச்சலிட்டார்கள். மேடையேறினாலே சிம்பு வெர லெவலாக பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் தொகுப்பாளர் கார்த்தி அவரிடம் மைக்கை கொடுக்க, சிம்பு முதலில் மேடையின் முன் அமர்ந்திருந்த மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து ஆகியோருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். பின், ”யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒரேயொரு விஷயம்தான் இங்கு சொல்ல முடியும். அது என்ன என்றால் 'தேங்க் யூ... தேங்க் யூ சோ மச்'” என்று மணிரத்னத்தை பார்த்து சிம்பு கூறினார்.
 

 

 

அதனைத் தொடர்ந்து பேசிய சிம்பு, ”தேங்க் யூ... இதுதான், இந்த ஒரு வார்த்தை மட்டும்தான் இப்போ பேசமுடியும் என நினைக்கிறேன். நான் கண்டிப்பா பேசுவேன். நான் நன்றாக பேசுவேன் என்று உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போ இங்கு ஒரேயொரு விஷயம்தான் சொல்ல விரும்புகிறேன். இப்போ நான் பேசுறதவிட, மணிரத்னம் சார் சொல்ல நினைத்ததை நீங்கள் படமாக திரையில் பார்க்கும் போது, அது பேசும் என நினைக்கிறேன். அந்த படம் பேசிய பின்னர், கண்டிப்பாக நான் பேசுவேன்” என்று மேடையில் பேச்சை முடித்துவிட்டு மைக்கை தொகுப்பாளரிடம் கொடுத்துவிட்டு, உடனடியாக மேடையை விட்டு கீழே ஓடிப்போய் மணிரத்னம் அருகில் இருக்கும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

 

சார்ந்த செய்திகள்