பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதையும் தாண்டி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.இந்நிலையில் தற்போது ஜாம்பி படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகியிருப்பதாக கூறினார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடித்துள்ள படம் என்பதால் ஜாம்பி படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருப்பதாகவும் கூறியுள்ள யாஷிகா, இந்த படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருப்பதோடு சண்டைக் காட்சியிலும் நடித்திருப்பதாக கூறினார். ரசிகர்களுடன் மக்களுக்கு உதவி செய்ததாக கூறிய அவர், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றும் அதன் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் கூறினார். யாசிகாவின் இந்த அறிவிப்பை கேட்ட அவரது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.