பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனமான 'ஹூக்' திவாலானதை அடுத்து அதன் சேவைகளை மொத்தமாக நிறுத்தியுள்ளது.
இந்நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. சிங்டெல், சோனி பிக்சர்ஸ் மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் கடந்த ஜனவரி 2015 ஆம் ஆண்டு இந்த ஸ்ட்ரீமிங் தளம் தொடங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு, டிஸ்னியின் ஹாட்ஸ்டாருடன், அதன் ஹாலிவுட் தயாரிப்புகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான, பல மில்லியன் டாலர் மதிப்பிலான 4 வருட ஒப்பந்தத்தைப் போட்டது. தற்போது நிறுவனம் திவால் ஆனதால் இந்த ஒப்பந்தமும் ரத்தாகியுள்ளது.
ஆசிய மக்களுக்கு ஆசியாவிலேயே தயாரான தளம் என்று தொடங்கப்பட்ட இது. உலகம் முழுவதும் ஏற்பட்ட பலத்த போட்டியில் ஈடு கொடுக்க முடியாமல் தானாகவே முன்வந்து திவால் அறிக்கையை சிங்கப்பூரில் தாக்கல் செய்தது.
தனது இணையத்தளத்தையும் முடக்கியுள்ள ஹூக், அதில் ஏப்ரல் 30, 2020-லிருந்து ஹூக் சேவை செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.