
ரஜினி, கமல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி படங்களில் நடித்து தங்களுக்கென தனிமார்க்கெட் பிடித்து கோலோச்சினார்கள். பிறகு அவர்கள் வழியில் பல முன்னணி நடிகர்கள் முயற்சி செய்து பலன் அளிக்காத நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அதை தகர்த்தெறிந்தவர் நடிகர் தனுஷ். ஹிந்தியில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராஞ்சனா மற்றும் ஷமிதாப் ஆகிய 2 படங்களும் ஹிட்டடித்தன. இந்நிலையில் தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷும் ஒரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். நாச்சியார் படத்தில் ஜிவியின் நடிப்பைப் பார்த்து அசந்த டைரக்டர் அனுராக் காஷ்யப், ஹிந்தி பட வாய்ப்பு அளித்துள்ளார். அதற்கு, தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் ஹிந்திக்கு வருகிறேன் என சம்மதம் சொல்லியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். அனுராக் காஷ்யப், பல வருடங்களாக இயக்குனர்கள் பாலா, அமீர், சசிக்குமார் ஆகியோரை புகழ்ந்து வருபவர். 'சுப்ரமணியபுரம்' படத்தை தனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டவர். இவர் தற்போது 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.