
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். முன்னதாக படத்தில் இருந்து அஜித்தின் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அதில் அஜித் மாறுபட்ட தோற்றத்தில் உடல் எடை குறைத்து இளமையாக இருந்தார். அது அவரது ரசிகர்களை குஷி படுத்தியது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த பிப்ரவரியில் த்ரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து அவரது கதாபாத்திர வீடியோவை படக்குழு. பின்பு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பர்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது. அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’(OG Sambavam) மற்றும் ‘காட் ப்ளஸ் யூ’(God Bless U) பாடல்கள் லிரிக் வீடியோவுடன் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் அமர்களம், தீனா, வரலாறு, வில்லன் போன்ற அஜித்தின் முந்தைய பட டயாலக்குகள் மற்றும் ரெஃபரன்சுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சமூக வலைதளங்களில் வைரலான ‘இருங்க பாய்’, ‘கார்டு மேலே பதினாறு நம்பர்’ உள்ளிட்ட வார்த்தைகளும் வசனங்களாக வருகின்றன. அதோடு பழைய ஹிட் பாடலான ‘ஒத்த ரூபாய் தாரேன்’ பாடல் இடம்பெற்று அந்த பாடலின் பின்னணி இசைக்கேற்ப சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. டிரெய்லர் முழுவதும் அஜித் திரை வாழ்க்கையில் நடித்த முக்கியமான படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெற்று ஒரு யூனிவர்ஸ் போல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் ட்ரெய்லரை கொண்டாடி வருகிறார்கள். இந்த டிரெய்லர் தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங் லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.