Skip to main content

விஜய் ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட ஜெனிலியா

Published on 24/04/2025 | Edited on 24/04/2025
genelia thanked vijay fans for sachin re release

விஜய், ஜெனிலியா நடிப்பில் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். தாணு தயாரித்திருந்த இப்படத்தில் வடிவேலு, ரகுவரன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருந்திருந்த இப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் பின்பு இப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. பாடல்களும் இன்றளவும் முணுமுணுக்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்துள்ளதை ஒட்டி கடந்த சில மதங்களுக்கு முன்பு இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்ட நாயகி ஜெனிலியா, “எனக்கு சச்சின் படத்தை கொடுத்து படப்பிடிப்பு முழுவதும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்ட உங்களுக்கு நன்றி. நான் நடித்த சிறந்த படப்பிடிப்புகளில் இந்தப் படமும் ஒன்று” என கடந்த பிப்ரவரி மாதம் எக்ஸ் பக்கம் வாயிலாக பதிவிட்டிருந்தார். பின்பு தயாரிப்பாளர் தாணு புது படம் வெளியாகுவது போல் படத்தின் ஒவ்வொரு பாடல் மற்றும் ட்ரைலரை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தார். 

பின்பு படம் கடந்த 18ஆம் தேதி ரீ ரிலீஸானது. படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஜெனிலியாவின் தோழியாக வரும் ரஷ்மி ரசிகர்களை கவந்தார். அவர் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ஜெனிலியா விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில், “வணக்கம் விஜய்  ஃபேன்ஸ். எப்படி இருக்கீங்க. நான் உங்க ஷாலினி. 20 வருஷம் முன்னாடி சச்சின் ரிலீஸாச்சு. இப்போ ரீ ரிலீஸாயிருக்கு. விஜய் செம்ம க்யூட். ஆழ்மனசுல இருந்து சொல்றேன், சச்சின் ரீ ரிலீஸை திருவிழா போல கொண்டாடும் விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி. அந்த படம் என் மனசுக்கு நெருக்கமான ஒன்று. உங்களுக்கும் கூட என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.   

சார்ந்த செய்திகள்