
தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கை இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிபில் இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். நேபாளத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் நாயகியாக கவுதமியின் மகள் சுப்புலட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த தகவல் குறித்து கவுதமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்..."எனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி தற்போது அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே தற்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.