Skip to main content

தல, தளபதி படம் மாதிரி இருக்கும்... 'ஃப்ரெண்ட்ஷிப்' அப்டேட் கொடுத்த ஹர்பஜன் சிங்!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

friendship movie

 

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததையடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

 

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் மீண்டும் இறங்கியுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 17ஆம் தேதி 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்ட ஹர்பஜன் சிங், "நாங்க வரோம்! உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கணும் அப்படிங்கிற எண்ணத்தோட "செப்டம்பர் 17" நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ்! சூப்பர்ஸ்டார், தல, தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கும்" எனத் தமிழில் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்