ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம், அதை ரத்து செய்திருந்தது. இதையடுத்து சினிமா திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்துரு தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திரையரங்கில் கட்டணமில்லா குடிநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வெளியிலிருந்து உணவுப் பொருட்களை எடுத்து வரக்கூடாது எனக் கூற திரையரங்கத்திற்கு உரிமை உள்ளது. அதே சமயம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களை எடுத்து வந்தால் திரையரங்கம் மறுப்பு தெரிவிக்கக்கூடாது. திரைப்படம் பார்க்க வருபவர்கள் திரையரங்க விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.