உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வருடா வருடம் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் முதல் அந்த ஆண்டு ஜூலை வரையில் எந்த நடிகர் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் அக்ஷய்குமார்தான் அதுவும் ஜாக்கி சானை பின்னுக்கு தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![rock](http://image.nakkheeran.in/cdn/farfuture/TLT7XIYdV5PXryFelz18oCSOlAtbBl_CT5XpCyMc5vI/1566475022/sites/default/files/inline-images/rock.jpg)
wwe புகழ் ‘தி ராக்’ எனப்படும் ட்வெய்ன் ஜான்சன்- ரூ. 640 கோடி, தோர் கதாபாத்திரத்தில் நடித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் - ரூ. 547 கோடி, அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் - ரூ. 473 கோடி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் - ரூ. 466 கோடி, ஜாக்கி சான் - ரூ. 415 கோடி, ஹேங் ஓவர் புகழ் பிராட்லி கூப்பர் - ரூ. 408 கோடி, ஹாலிவுட் நடிகர் ஆடம் சாண்ட்லர் - ரூ. 408 கோடி, கேப்டன் மேனாக நடித்த கிறிஸ் இவான்ஸ் - ரூ. 311 கோடி, பால் ரட் - ரூ. 293 கோடி, வில் ஸ்மித் - ரூ. 250 கோடி.