சரியோ தவறோ, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி வந்துள்ள ஃபாத்திமா பாபுவை சந்தித்தோம். மற்ற போட்டியாளர்களிடம் தனக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
வனிதா: தனக்கு பிடிச்சிருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வாள். பிடிக்கலைனா தூக்கிபோட்டுட்டு ஈஸியா போயிடுவா, இதான் அவளுடைய கேரக்டர்.
அபிராமி: மனசில் நினைப்பதை டமால்னு சொல்லக்கூடியவள், பெரிய டான்ஸர், பெரிய நடிகர்களின் படங்களில் எல்லாம் நடித்து வருகிறாள்.
சேரன்: அவருக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை 100 சதவீதத்துக்கு மேல் சிறப்பாக அதிகம் செய்வார். அதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாம கூட போயிருக்கு. ஆனால், அவர் என்னை எப்போதும் ஒரு சமையல்காரி மாதிரி நினைப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கவின்: பெரியவர்களை அவன் ஆட்டத்திலேயே சேர்த்துக்க மாட்டான், எப்போதும் சின்ன வயசு பசங்க, பொண்ணுங்க கூட மட்டும்தான் பேசுவான். அது எனக்கு பிடிக்காது. எல்லா விஷயத்தையும் முயற்சி பண்ணி பார்க்கனும்னு நினைப்பான்.
லாஸ்லியா: அவள் ஒரு பட்டாம்பூச்சி, 10 வருஷமா அவள் அவளுடைய அப்பாவிடம் வீடியோ காலில்தான் பேசி வருகிறாள். அது எவ்வளவு பெரிய விஷயம். இந்த தமிழ்நாட்டை விட்டு அவள் இலங்கை போகமாட்டாள், தமிழ்நாடு அவளை ஏற்றுக்கொள்ளும். அவளிடம் பிடிக்காத விஷயம்னு எதுவும் இல்லை.
தர்ஷன்: ரொம்ப தெளிவான பையன். தனக்கு யார் வேண்டும் என்பதில் தெளிவா இருப்பான். இன்னும் அவன் விவரமா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முகின்: ரொம்ப நல்லா பாடுவான். என்னை எம்.ஜி.ஆர் என்று கூப்பிடுங்கள் என்று எங்களிடம் சொல்லுவான்.நாங்கள் யாரும் அப்படி கூப்பிட மாட்டோம்.
மதுமிதா: ரொம்ப வெகுளியான பொண்ணு, முதல் வாரம் என்னை நாமினேட் பண்ணிட்டு அடுத்தவாரம் என்னிடமே தலைவாரிக்கிட்டவள். நான் எதையும் மனதில் வைத்துக் கொள்வதில்லை.
சாண்டி மாஸ்டர்: ரொம்ப ஜாலியானவன். அந்த மாதிரி கேரக்டர் நம்ம கூட இருப்பது நமக்கு புத்துணர்வாக இருக்கும், சடார்னு ஏதாவது அடுத்தவர்களிடம் சொல்லிடுவான், அதை அவன் குறைக்கணும். மதர், மதர்னு அவன் கூப்பிடும்போது ரொம்ம சந்தோஷமா இருக்கும்.
சாக்ஷி: சின்ன விஷயத்தை பெரிசா நினைத்து பேசுவாள், அதை அவள் கண்டிப்பா மாற்றிக்கொள்ள வேண்டும். கவின்கிட்ட அவள் அதிகம் உரிமை எடுத்துகிறதும் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம்.