![famous company acquired the ott rights of dhanush movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/9RkXSPiSonlZaaaNX_-I7B9vuoL8AoL-oSt0b2oQpyA/1653378420/sites/default/files/inline-images/Untitled-4_19.jpg)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'நானே வருவேன்'. 'வி கிரியேஷன்' சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் செல்வராகவனும் நடித்து வருகிறார். இந்துஜா மற்றும் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'வாத்தி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.