சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 166 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![eros now](http://image.nakkheeran.in/cdn/farfuture/n8FBbaE2dT7G16KWP6xrilGHhJ_9wV9nJVZNxmrSQ2k/1584682559/sites/default/files/inline-images/eros-now.jpg)
இந்நிலையில் அரசாங்க ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் தவிர மற்ற துறை ஆட்கள், தனியாரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதை போன்றே மற்ற நாடுகளிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சுய தனிமையில் வீட்டில் இருப்பவர்கள் போர் அடிக்காமல் இருக்க இராஸ் நவ் இணையத்தளம் இரண்டு மாதங்களுக்கு அனைவருக்கும் பயன்பாட்டை இலவசமாக்கியுள்ளது.