Published on 25/08/2022 | Edited on 25/08/2022

இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார். இயக்குநர் கெளதம் மேனனிடம் இணை இயக்குநராக இருந்த மணி நாகராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தினை இயக்குவதாக தகவல் வெளியிட்டிருந்தார்
இந்த நிலையில் இயக்குநர் மணி நாகராஜ் இன்று உயிரிழந்துள்ளார். இவர் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரசிகர்கள், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.