இயக்குனர் எச்.வினோத் இயக்கிய படங்கள் எதுவுமே சாதாரணமாவை அல்ல. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது. படம் குறித்தும் அவரது பயணம் குறித்தும் பேசினோம். நக்கீரன் இதழில் வெளியாகியுள்ள முழு பேட்டியின் ஒரு பகுதி இங்கே...
சமீபத்தில் அஜித் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பைக்கில் ட்ராவல் செய்தார். அதைப் பற்றி உங்களிடம் ஏதாவது பகிர்ந்து கொண்டாரா?
நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இங்கு சுதந்திரமாக அவரால் வெளியே வரமுடியாத சூழல் உள்ளது. பைக் ட்ராவல் போகும்போது அது உடைவதாகக் கூறினார். பெட்ரோல் பங்கில் டென்ட் அமைத்துத் தங்கி அவர்களே அங்கு சமைத்து சாப்பிட்டது, லடாக்கில் ஒரு வீட்டில் சாப்பிட்டு அவர்களிடம் பணம் கொடுத்தபோது நீங்கள் எங்கள் கெஸ்ட் என்று கூறி ஒரு லேடி பணம் வாங்க மறுத்துவிட்டது எனப் பல நெகிழ்ச்சியான விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
'வலிமை' படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் ரியலாக உள்ளதே? அதைப் படமாக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
படத்தில் உள்ள 95% ஸ்டண்ட் காட்சிகள் ரியலாக எடுக்கப்பட்ட காட்சிகள்தான். அதைப் படமாக்குவது தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும்சவாலாக இருந்தது. எனக்கு கியர் பைக் ஓட்டவே தெரியாது. அதனால் அதைப் படமாக்கும்போது என்னென்ன பிரச்சனைகள் வருமென்று பைக் பற்றி எல்லாம் தெரிந்த அஜித் சாரிடமும் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் டிஸ்க்ஸ் பண்ணிய பிறகுதான் ஷூட் பண்ணோம். இன்றைக்கு விதவிதமான ஸ்கில்சுடன் பைக் ஓட்டுவது பெரிய ஸ்போர்ட்ஸாக மாறியுள்ளது. அதனால் அதில் திறமையுள்ள ஆட்களை மும்பை, கோயம்புத்தூர் எனப் பல இடங்களில் இருந்து அழைத்து வந்து நடிக்க வைத்தோம். ஃபைட் சீன்ஸ் ரியலாக வந்துள்ளது என்றால் அதற்கு ஸ்டண்ட் டீம்தான் முக்கிய காரணம்.