Skip to main content

"நான் அப்படி சொல்லவே இல்லை" - இசைஞானி குறித்து தினா விளக்கம்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
rdhdr

 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக ரெக்கார்டிங் பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி ரெக்கார்டிங் தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இந்நிலையில் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கட்ட முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது இளையராஜா மத்திய மாநில அரசுகள் தனக்கு கொடுத்த விருதுகளை திருப்பி கொடுக்கவுள்ளதாக கூறினார். இதற்கு தான் அப்படி சொல்லவே இல்லை என கூறி இசைஞானி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இசையமைப்பாளர் தினாவும் தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

"இன்றைக்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு தவறுதலான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் அந்த உயரிய விருதுகளை தூக்கி கிடங்கில் போட்டுவிட்டார்கள் என்று தான் நான் கூறினேன். ஆனால் நானோ இசைஞானி இளையராஜா விருதுகளை மத்திய மாநில அரசுகளுக்கு திருப்பி கொடுக்கவுள்ளார் என்று கூறியதுபோல் தவறுதலாக ஊடங்ககளில் வந்துகொண்டிருக்கிறது. அது முற்றிலும் உண்மையல்ல. தவறான செய்தி. நானும் உணர்ச்சி மிகுதத்தில் விருதுகளை அவர்கள் கொடுத்திருக்கலாமே என்பதுபோல் சொல்லியிருப்பேனே தவிர அவர் விருதுகளை திருப்பி கொடுக்க போகிறார் என்று நான் சொல்லவே இல்லை. இந்த பதிவு தவறாக பகிரப்பட்டு இருந்தால் தயவுசெய்து மாற்றி அமைத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்