வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் அசுரன். அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் கருணாசின் மகன் கென், பாடகர் டீஜே உள்ளிட்டோர் தனுஷுக்கு மகனாக நடித்துள்ளனர்.

வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். தற்போது நடிகாராக பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் மீண்டும் இந்த படத்தின் மூலம இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த படத்தில் தனுஷுடன் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்களை நடிகர் கென் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் சாருடன் நான் மிகவும் நெருக்கமானதற்கு முதல் காரணம் பப்ஜி விளையாட்டுதான் என்றார். ஆமாம், நாங்கள் பப்ஜி விளையாடிதான் ஒன்றாகினோம் என்று டீஜேவும் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுடன் கிரிக்கெட்டும் விளையாடுவார் என்றார். இந்த தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.