Skip to main content

தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் ரிலீஸ் அப்டேட் 

Published on 11/12/2024 | Edited on 11/12/2024
dhanush neek movie release update

ராயன் படத்திற்கு பிறகு ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இட்லி கடை என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதோடு அதில் நடித்தும் வருகிறார். இப்படம் தனுஷின் 52வது படமாக உருவாகி வருகிறது. 

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குவதோடு மட்டும் இல்லாமல் தயாரித்தும் வருகிறார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் கடந்த செப்டம்பரில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான ‘காதல் ஃபெயில்’ வெளியானது. சூப் சாங்காக அமைந்த இந்தப் பாடல் தனுஷ் எழுதி பாடியிருந்தார். 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2025 பிப்ரவரி 7ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்