Skip to main content

தனுஷ் தொடர்ந்த வழக்கு; நயன்தாராவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
dhanush nayanthara case court hearing date

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த மாதம் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானபோது, அதில் நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இதையடுத்து அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து வெளியாகியிருந்த அந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக இடம் பெற்றிருந்தது.

அதன் பின்பு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை சேர்த்து, நெட் ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. 

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீண்டும் எதிர் மனுதாரர்கள் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்றும் அதற்கு தனுஷ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணை வருகிற ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்