![dhanush naane varuven first single update released](http://image.nakkheeran.in/cdn/farfuture/3SKsxE8wqtNdFWqAlMGyR8-ZDTb-wzZDUf5bYXj7e8Q/1662383756/sites/default/files/inline-images/08_9.jpg)
வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் செல்வராகவன் இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் உள்ளார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் தெரிவித்து, "ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்... ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம் 🏹#Naanevaruven @selvaraghavan @theVcreations pic.twitter.com/fZCDa1OdN4— Dhanush (@dhanushkraja) September 5, 2022