Skip to main content

புதிய சாதனை படைத்த தனுஷ் பட பாடல்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

dhanush maari movie song create new record youtube

 

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் 'மாரி' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனுஷ் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷின் துள்ளலான நடிப்பும், வசீகரமான கதாபாத்திரமும் பலரையும் கவர்ந்தது. இப்படத்தில் பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. 

 

இந்நிலையில் மாரி படத்தில் இடம்பெற்ற தரலோக்கள் பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பாரவையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற "டானு டானு..." படம் 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது 'மாரி' படத்தின் மற்றோரு பாடலான "தரலோக்கல்..."  பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.  இதே போன்று தனுஷின் "கொலவெறி...", "ரௌடி பேபி...", "மறுவார்த்தை பேசாதே..." போன்ற பாடல்களும் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்