Skip to main content

"என் வாழ்க்கைல நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" - தனுஷ் நெகிழ்ச்சி!  

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

dgsag

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், யோகி பாபு, சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். ஹாலிவுட் படத்துக்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் தனுஷ் இருப்பதால், அவர் இவ்வழாவில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் கடிதம் மூலம் படக்குழுவுக்கு வாழ்த்து அனுப்பினார். அந்த கடிதம் விழாவில் வாசிக்கப்பட்டது. அதில்...

 

"உங்களோடு இப்போது இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாகவே இருந்திருப்பேன். சீக்கிரம் வருவேன். ’கர்ணன்’ எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் ஸ்பெஷலா நினைக்கிற, கொண்டாடுற நிறைய பேர் இந்தப் படத்துல இருக்காங்க. இந்தப் படம் எனக்கு ஒரு நடிகனா, மனிதனா நிறைய விஷயங்கள் கத்துக் கொடுத்துச்சு. மாரி செல்வராஜோட உறுதியும், அவரோட மனிதத் தன்மையும் தினம் தினம் ஆச்சரியமா இருந்தது. ஒரு நபர், மாரி மாதிரி ஒரு நல்ல மனிதராக இருக்க முடியுமான்னு நான் அடிக்கடி யோசிப்பேன். என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கும், என் வாழ்க்கைல நீங்க வந்ததுக்கும் ரொம்ப நன்றி மாரி. எப்பவும் இப்படியே இருங்க. உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான இடம் காத்துக்கிட்டு இருக்கு.

 

vgeshrs

 

என்னையும் நான் தேர்ந்தெடுக்கிற கதைகளையும் அவ்ளோ நம்புற தாணு சாருக்கு என் நன்றி. அவர் என் மேல வச்சிருக்கிற கண்மூடித்தனமான நம்பிக்கை, எனக்கு ஒரு நடிகனா இருக்கிற பொறுப்புகளை ஞாபகப்படுத்திட்டே இருக்கு. இன்னும் அதிகமா உழைக்கணும், அப்படிங்கிற சக்தியைக் கொடுத்துகிட்டே இருக்கு. நம்ம மண்ணோட இசை வழியாகவும், அந்த மண்ணின் கலைஞர்கள் மூலமாகவும் சந்தோஷ், கர்ணனுக்கு யானை பலத்தைச் சேர்த்திருக்கார். அவருக்கு நன்றி. எனக்கு நல விரும்பிகள் கம்மிதான். என்னோட உண்மையான நல விரும்பிகளாக இருந்ததுக்கு ரொம்ப நன்றி சந்தோஷ்.

 

இந்த இடத்துல நான் மீனா சந்தோஷுக்கும் என் நன்றியைச் சொல்லணும். அவங்கதான் எனக்கு மாரி செல்வராஜை அறிமுகப்படுத்தி வச்சாங்க. நன்றி தேனி ஈஸ்வர் சார். உங்களோட பணியைப் பார்த்த எல்லாரும் அத அவ்ளோ நேசிக்கிறாங்க. வாழ்த்துகள் சார். ’கர்ணன்’ படக்குழுவினருக்கும், அவங்க அர்ப்பணிப்பு, அன்பு, ஆதரவு எல்லாத்துக்கும் நன்றி. இந்தப் படத்துக்காக உடல்ரீதியா, மனரீதியா, உணர்ச்சிரீதியா என்னை விட அதிகமான உழைப்ப அவங்க எல்லாருமே போட்டிருக்காங்க. 'கர்ணன்' இவ்ளோ நம்பகத்தன்மையோட இருக்கு அப்படின்னா அது அவங்க எல்லாரோட கடும் உழைப்பால தான். எனக்குத் தொடர்ந்து ஆதரவும், அன்பும் அளித்துவரும் என் ரசிகர்களுக்கு நன்றி. நான் என்னோட சிறந்த நடிப்பைக் கொடுக்க எப்போதுமே முயற்சி பண்றேன். ’கர்ணன்’ உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்னு நம்புறேன். இங்க வந்ததுக்கு எல்லாருக்கும் மறுபடியும் நன்றி. ’கர்ணன்’ வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

”பரியேறும் பெருமாளை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்காததற்கு இதுதான் காரணம்” - கலை இயக்குநர் ராமலிங்கம் 

Published on 24/06/2022 | Edited on 24/06/2022

 

Art Dir Ramalingam

 

"வடசென்னை என்பது பழமையை உள்வாங்கிய இடமாக உள்ளது. இன்றைக்கு அங்கு சென்று பார்த்தாலும் பல விஷயங்கள் பழமை மாறாமல் உள்ளன. அதனால் வடசென்னை மீது எனக்கு காதல் அதிகம். சார்பட்டா பரம்பரை படத்திற்கு கலை இயக்கம் செய்தது பெரிய அனுபவமாக இருந்தது. 

 

சமூக மாற்றத்திற்கான படங்களையும் சாதிய படங்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கிறார்கள். பா.ரஞ்சித் எடுக்கும் படங்கள் சமூக மாற்றத்திற்கான படங்கள். எந்த இடத்திலும் என்னுடைய சாதி உயர்ந்த சாதி என்று ரஞ்சித் காட்டியதே இல்லை. என்னை ஏன் இப்படி பண்ணுற, நான் இப்படித்தான் இருப்பேன், என்னை என்னுடைய போக்கிலேயே விட்டுவிடு என்று படம் எடுத்தால் அதைத் தவறு என்கிறார்கள். 

 

நான் கால் மேல் கால் போட்டு உட்காருவேன் என்று சொன்னால் அதைத் திமிராகச் சொல்வதாக சொல்கிறார்கள். நீ அவனை கால் மேல் கால் போடாதே என்று சொல்வதால்தான் அவன் கால் போடுவேன் என்கிறான். அவன் கால், அவன் எங்கேயும் போட்டுக்கொள்கிறான், அதில் உனக்கு என்ன பிரச்சனை வருகிறது?

 

எனவே இந்த மாதிரியான படைப்புகளை சமூக மாற்றத்திற்கான படமாகத்தான் பார்க்க வேண்டும். மிகப்பெரிய அறிவாளி மாதிரி இருப்பவர்கள்கூட ரஞ்சித் சாதிப்படம் எடுப்பதாகச் சொல்கிறார்கள். மாரி செல்வராஜ் எடுத்த பரியேறும் பெருமாள் படத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கர்ணன் படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் என்னிடம் சொல்வதைக்கூட தன்மையாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்" என்றார். 

 

 

 

Next Story

"இது என் மனதிற்கு நெருக்கமான படம்" - கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ்

Published on 09/04/2022 | Edited on 11/04/2022

 

dhanush tweet about karnan film

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஆண்டு  வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினார். தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கிவரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி 'நானே வருவேன்' படப்பிடிப்பில் தனுஷ், மாரி செல்வராஜ், தாணு  உள்ளிட்ட படக்குழுவினர் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், "கர்ணன் பிளாக்பஸ்டர் படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டது. இது என் மனதிற்கு நெருக்கமான படம். இது எல்லாவற்றிக்கும் காரணமான மாரி செல்வராஜ், தாணு சார், சந்தோஷ் நாராயணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.