Skip to main content

படப்பிடிப்பு நிறைவு - தனுஷ் பட அப்டேட் வெளியீடு

Published on 26/04/2025 | Edited on 26/04/2025
dhanush idly kadai movie shoot wrapped

தனுஷ் நடிப்பு இயக்கம் என பிஸியாக பயணித்து வருகிறார். இப்போது நடிகராக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெய்ன்’, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ பிக், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் ஒரு படம் மற்றும் மாரி செல்வராஜுடன் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். இது போக அவரே இயக்கி நடித்து வரும்  இட்லி கடை படத்தையும் கவனித்து வருகிறார். 

இதில் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க நித்யா மெனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். மேலும் தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்திருந்தார். கிராமத்து பிண்ணனியில் இப்படம் உருவாகும் நிலையில் இதுவரை வெளியான படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  படத்தின் படப்பிடிப்பு தேனி, பொல்லாச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடந்து வந்தது. 

இந்த நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதோடு விரைவில் ஒரு அப்டேட் வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.  

சார்ந்த செய்திகள்