பாலிவுட்டில் ஹிட்டாகி பின்னர் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்று ரீமேக் செய்யப்பட்ட படம் பிங்க். அமிதாப் பச்சனை தொடர்ந்து தமிழில் அஜித் நடித்திருந்தார். தமிழிலும் இது ஹிட் அடித்ததை தொடர்ந்து, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். கடந்த வருடமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இன்று பவனின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. பவனின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்ற நிலையில் நேற்று இரவு பவன் கல்யாணுக்கு கட்டவுட் வைக்கும்போது சரிந்து விழுந்ததில் மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"நேற்றிரவு நடந்த பவன் கல்யாண் ரசிகர்களின் சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம். ரசிகர்களின் அன்பு சமமற்றது. உங்கள் வாழ்க்கை மிகவும் முக்கியமானது என்பதால் தயவுசெய்து மிகவும் கவனமாக இருங்கள். உயிரை இழந்த சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவாக மீண்டு வரவும், அவர்களின் குடும்பங்கள் வலிமை பெறவும் பிரார்த்தனை செய்கிறேன்" என கூறியுள்ளார்.
Deeply saddened by last night’s incident of #PSPK Fans?
D Love of Fans is Unequalled..
But pls be very careful as ur Lives r very important??
My heartfelt condolences to d brothers who lost their lives n praying 4 strength to their Families??
Speedy recovery 2 d injured???
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) September 2, 2020