![jgvkhjbk](http://image.nakkheeran.in/cdn/farfuture/mHn0OhO35B-uWMBkbAvEHW9ThB752CTYGGaQQPLEHq0/1597981679/sites/default/files/inline-images/devi-sri-prasad.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் கூட்டு பிரார்த்தனை குறித்தும், எஸ்.பி.பி குணமாக வேண்டியும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்..."லெஜெண்டின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தியுங்கள். நாம் அனைவரும் நம் இதயம் & ஆன்மாவை ஒன்றாக வைத்து அவர் குணமாகி ஆரோக்கியமாக திரும்பி வந்து நமக்காக மீண்டும் பாடும் வரும் வரை ஜெபத்தை தொடருவோம். #GetWellSoonSPBSIR ஐ லவ் யூ சார்! நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்" என கூறியுள்ளார்.
PRAY for the HEALTH of the LEGEND??❤️
Lets all put our HEARTS & SOULS
Together & Keep Praying till He gets Bak HALE & HEALTHY SOOON & SING for all of US !!#GetWellSoonSPBSIR
Lov U sir ! We r all waiting for U ❤️??? pic.twitter.com/nRTQ3Mwgxw
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) August 20, 2020