Skip to main content

இணையத்தில் வைரலாகும் 'சூரரைப் போற்று' படத்தின் நீக்கப்பட்ட சண்டைக் காட்சி

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

The deleted scene of the movie 'Soorarai potru' is going viral on the internet


சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் 'சூரரைப் போற்று'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் சமீபத்தில் நடந்த 68-வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்க சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தமிழில் இயக்கிய சுதா கொங்கரா-வே இந்தியிலும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்தில் நீக்கப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த சண்டைக் காட்சி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. படத்தில் இந்த சண்டைக்காட்சி தேவையில்லை எனப் படக்குழு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்