Skip to main content

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் தனுஷ்!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

vdbdsbds

 

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'டி43'. ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

hfdhfd

 

இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிந்து, படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 'டி43' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் தனுஷின் பிறந்தநாளான 28 ஜூலை (நாளை) காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு சார்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்