Skip to main content

நயன்தாரா மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

Complaint Human Rights Commission against Nayanthara

 

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமணம் முடிந்த கையேடு  இருவரும் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது நயன்தாரா கோயில் வளாகத்தில் செருப்புகளுடன் சென்றதாகச் சர்ச்சை எழுந்த நிலையில் இதற்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து மன்னிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் நயன்தாராவின் கேரள மாநிலத்தில் உள்ள நயன்தாராவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் நடிகை நயன்தாரா மீது மீண்டும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த நாளில் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடற்கரை பொதுவான இடம். அங்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மனித உரிமை மீறல் என்று கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்