
கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பிரபலங்கள் மத்தியில் பெரிதாக ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் மக்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் அளவிற்குச் சமூக வலைத்தளம் பயன்படுகிறது என்பதை உணர்ந்து பலரும் தங்கள் கருத்தை வீடியோவாக வெளியிடுகின்றனர்.
இதனிடையே இன்று (மே 5) மாலை நடிகர் செந்தில் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அவருடைய பெயரில் ஒரு அறிக்கையும் வெளியிட்டார்கள். @senthiloffl என்ற பெயரில் அந்த ட்விட்டர் கணக்கு இருந்தது.
இந்நிலையில் செந்தில் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர் எந்தவித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.